ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஒவைசியின் வீட்டிற்கு அமெரிக்க தூதரக ஜெனரல் ஜெனிபர் லார்சன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிபர் லார்சன் கடந்த திங்கட்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள ஒவைசியின் வீட்டிற்கு சென்றதோடு, அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசியலில் அமெரிக்கா தலையிடுவதாகவும், பிறநாட்டு தூதரகத்தை சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டுமெனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.