அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமர் கோயிலுக்கு செல்லும் பாதையில் சுமார் 6 ஆயிரத்து 400 மூங்கில் விளக்குகளும், 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டன.
இதில், 3 ஆயிரத்து 800 மூங்கில் விளக்குகளும், 36 புரொஜெக்டர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளதாக, விளக்குகளை நிறுவிய தனியார் நிறுவனம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது.