ராயன் திரைப்படத்தில் தனது கணவரை நடிக்க வைத்ததற்காக, தனுஷிற்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் சகோதரி கார்த்திகா தேவியின் கணவர் கார்த்திக் ஆஞ்சநேயன், ராயன் திரைப்படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜுடன் பணியாற்றும் காவலராக துணை வேடத்தில் நடித்தார்.
இதற்காக, ராயன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து தனுஷிற்கு நன்றி கூறியுள்ள கார்த்திகா, இந்த புகைப்படங்களை வெளியிட தான் ஓராண்டிற்கு மேலாக காத்திருந்ததாகவும், தனது கணவரை வெள்ளித்திரையில் காண்பேன் என தான் கனவிலும் எண்ணியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.