விஸ்வம்பரா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, நடிகை திரிஷா சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகை திரிஷா தெலுங்கில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக, விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின்போது, சிரஞ்சீவி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினரோடு எடுத்த புகைப்படங்களையும், சிரஞ்சீவி வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட அறுசுவை உணவு வகைகளின் புகைப்படங்களையும் நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.