நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள், ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழா நடைபெறவுள்ள செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.