வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா அரசில் முக்கிய பொறுப்பு வகித்த சிலருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார்.
கருத்து, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டதாக ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
அவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்றும், ஆனால் அதற்காக அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக தண்டிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார்.