வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசு வீழ்ந்த பிறகு, 48 மாவட்டங்களில் உள்ள 278 இடங்களில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வங்கதேச தேசிய இந்து மகா கூட்டணி அமைப்பு தெரிவித்துள்ளது.
டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பலாஷ் காந்தி டே, இது தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்து மதத்தின் மீதான தாக்குதல் எனக் கூறினார்.
கொள்ளை, தீ வைப்பு, நில அபகரிப்பு போன்றவற்றிற்கு இந்துக்கள் ஆளாகியுள்ளதாக வங்கதேச தேசிய இந்து மகா கூட்டணி அமைப்பு தெரிவித்துள்ளது.