மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மலேசிய பிரதமராக பதவியேற்ற பிறகு, அன்வர் இப்ராஹிம் இந்தியாவிற்கு வருவது முதல் முறையாகும். முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு மலேசிய பிரதமராக இருந்த முகமது நஜிப் துன் ஹாஜி அப்துல் ரசாக் இந்தியாவிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.