சீனாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையிலான கால கட்டத்தில் மட்டும் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குலக நாடுகளுடனான வர்த்தகப் போர், மந்தமான பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால், சீனாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து முதலீட்டாளர்கள் இவ்வளவு முதலீடுகளை திரும்பப் பெற்றது இதுவே முதல்முறையாகும்.