ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது வீட்டிற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கானேவால் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமானோர் குவிந்தனர் . அவர்களில் பலர் தங்களால் இயன்ற ரொக்கப்பரிசையும் நதீமிற்கு வழங்கினர்.
அரசு தரப்பில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டாலும் நதீமிற்கு இதுவரை இந்தத் தொகையும் வழங்கப்படவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டிற்கு பெருமை சேர்த்தவரை அவமதிக்கும் செயல் இது இணையத்தில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.