ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மரப்பாலத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் தேவாலயத்தினை சுற்றி பார்த்து பார்வையிட்டு செல்லும் வகையில் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரப்பாலம் அமைக்கப்பட்டது.
பணிகள் நிறைவு பெற்று 4 மாதங்களாகியும், இன்னும் இந்த பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விரைவில் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.