இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமூக வலைத்தளங்களில் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
podcast ஒன்றில் பேசிய சாய்னா நேவால், நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்லும் வரை தனக்கு ஈட்டி எறிதல் என ஒரு போட்டி இருப்பதே தெரியாது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை, கங்கனா ரணாவத்துடன் ஒப்பிட்டு கேலி செய்யத் தொடங்கினர். கங்கனா ரணாவத் அழகானவர் என்றும், அவருடன் தன்னை ஒப்பிட்டதற்கு நன்றி என்றும் சாய்னா நேவால் கூறியுள்ளார்.