பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் சுதந்திர தின வாழ்த்து கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு, பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளார்.
இந்நிலையில், சுதந்திர தின வாழ்த்து கூறி, அர்ஷத் நதீம் வெளியிட்ட வீடியோவின் பின்னணியில், ஒருவர் குறட்டை விடும் சத்தம் அதிகமாக இருந்தது. பலரை இதனை விமர்சித்த நிலையில், அர்ஷத் நதீம் அந்த வீடியோவை நீக்கி விட்டு புதிய வீடியோவை வெளியிட்டார்.