இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்படுவதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், வரும் செப்டம்பர் 1-இல் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதற்கு அடுத்தபடியாக பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.Morgal appointed as bowling coach of Indian team