ஓயோ நிறுவனம் கடந்த நிதியாண்டில் 229 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவும், எனினும் தாங்கள் இன்னும் பல விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும் ரித்தேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
தங்களது ஒரு பங்கின் வருவாய் 36 பைசாவாக உள்ள நிலையில், இந்த நிதியாண்டில் அதனை ஒரு ரூபாயாக அதிகரிப்பதே தங்களது இலக்கு என்றும் ரித்தேஷ் அகர்வால் கூறியுள்ளார்.