இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
2023-ஆம் நிதியாண்டில் இந்த விற்பனை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல், ஆப்பிள் நிறுவன பொருட்களின் ஒட்டு மொத்த உற்பத்தியில், 14 சதவீதம் பொருட்கள் இந்தியாவில் இருந்து தயாராவதால், அந்நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதி மையமாகவும் இந்தியா மாறி வருகிறது.