ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் இருக்கும் வீடியோ வைரலாகியிருக்கிறது.
அமெரிக்காவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் முகமது ஹரிஸ் தார் என்பவருடன் ஒன்றாக அமர்ந்து, அர்ஷத் நதீம் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முதல் தங்கத்தை வென்றதால், கடந்த 11-ம் தேதி தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய நதீமுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் தீவிரவாதியுடன் இருக்கும் வீடியோ வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.