கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள குண்டலா அணையின் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டன.
இதனையடுத்து குண்டலா ஆற்றின் நீர்மட்டம் 30 முதல் 70 சென்டி மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் குண்டலை முதல் மூணாறு வரை வசிக்கும் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வரும் 17-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.