ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட டோடா எல்லையில், தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாதிகள் அங்கு முகாமிட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், ராணுவ வீரர்கள் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராணுவ வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட ராணுவம், தக்க பதிலடி கொடுத்தது.
நீண்டநேரமாக நடைபெற்ற இந்த என்கவுன்ட்டரில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி ஆனந்த் ஜெயின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.