கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழங்குடியின மாணவர்களை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்ற பேரூராட்சி துணைத்தலைவரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
கிள்ளை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் 31 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
இதையறிந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரவீந்திரன், மாணவர்களின் வீடுகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் மாணவர்களை பள்ளிக்கு தனது காரில் அனுப்பி வைத்தார்,.