மயிலாடுதுறையில் அஞ்சல் துறை சார்பில் 78-வது சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அஞ்சலகத்தில் நிறைவடைந்தது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை கைகளில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். அப்போது பொதுமக்களிடம் தேசியக் கொடியை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.