சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் பாஜகவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்தது.
மேலும், பாஜகவின் முறையீட்டை ஏற்று, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழகத்தில் பாஜகவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.