கோவா டபோலிம் விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால், மீண்டும் விமானம் கோவாவை வந்தடைந்தது.
பின்னர், பயணிகள் கீழே இறங்கியதையடுத்து, அந்த விமானம் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பயணிகள் மாற்று விமானத்தில் மும்பை செல்ல ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இதுதவிர பயணச்சீட்டை ரத்து செய்த பயணிகளுக்கு அதற்கான கட்டணத்தை திருப்பியளித்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல, மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் மும்பை திரும்பியது. பின்னர், மாற்று விமானத்தில் பயணிகள் லண்டன் அனுப்பி வைக்கப்பட்டனர்.