நாளை செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Sep 7, 2025, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நாளை தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து 78 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். நினைவுச் சின்னத்தின் கொத்தளத்திலிருந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘வளர்ச்சியடைநத பாரதம் @2047’. 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதலாக இந்த கொண்டாட்டங்கள் திகழும்.

சிறப்பு விருந்தினர்கள்

நாட்டின் உற்சாகமான இந்த பண்டிகையில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு செங்கோட்டையில் கொண்டாட்டங்களைக் காண சுமார் 6,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு வரும் பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமணே ஆகியோர் வரவேற்க உள்ளனர். தில்லி பகுதி ஜெனரல் கமாண்டிங் அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமாரை பாதுகாப்புச் செயலாளர் பிரதமருக்கு அறிமுகப்படுத்துவார்.

பின்னர் தில்லி பகுதி ஜெனரல் கமாண்டிங் அதிகாரி, நரேந்திர மோடியை அணிவகுப்பு மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முப்படை மற்றும் தில்லி காவல் படை இணைந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தும். அதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை பிரதமர் பார்வையிடுவார்.

பிரதமருக்கான அணிவகுப்பு

மரியாதை குழுவில் இராணுவம், கடற்படை , விமானப்படை மற்றும் தில்லி காவல்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 24 வீரர்கள் இடம் பெறுவர்.

இந்திய கடற்படை இந்த ஆண்டு ஒருங்கிணைப்பு சேவையை மேற்கொள்கிறது. கமாண்டர் அருண் குமார் மேத்தா இந்த அணிக்கு தலைமை தாங்குவார்.

பிரதமரின் பாதுகாப்பு படையில் உள்ள ராணுவ படைக்கு மேஜர் அர்ஜுன் சிங் தலைமை தாங்குவார், கடற்படை படைக்கு லெப்டினன்ட் கமாண்டர் குலியா பவேஷ் என்.கே மற்றும் விமானப்படை படைப்பிரிவுக்கு ஸ்குவாட்ரன் லீடர் அக்ஷரா யூனியல் தலைமை தாங்குவார். தில்லி காவல் துறை படைக்கு கூடுதல் டி.சி.பி அனுராக் திவேதி தலைமை தாங்குவார் .

அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின்னர், பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளங்களுக்கு செல்கிறார், அங்கு பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் அவரை வரவேற்க உள்ளனர். தில்லி பொது கமாண்டிங் அதிகாரி கொடியை ஏற்றுவதற்காக பிரதமரை மேடைக்கு அழைத்துச் செல்வார்.

லெப்டினன்ட் சஞ்சீத் சைனி தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார். இது 1721 படைப்பிரிவின் இன் துணிச்சலான வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகளை வெடித்தும் வணக்கம் செலுத்துவர்.

உள்நாட்டு 105 மிமீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் இந்த பிரிவுக்கு மேஜர் சப்னிஸ் கௌசிக் மற்றும் துப்பாக்கி நிலை அதிகாரியாக நைப் சுபேதார் (ஏஐஜி) அனுதோஷ் சர்க்கார் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 32 பிற அணிகள் மற்றும் தில்லி காவல்துறையின் 128 பேரைக் கொண்ட அணி பிரதமரால் தேசியக் கொடியை ஏற்றும் நேரத்தில் வணக்கம் செலுத்தும். இந்த ஒருங்கிணைந்த சேவை மற்றும் காவல் துறை பிரிவுக்கு வினய் துபே தலைமை தாங்குவார் .

தேசிய கொடி ஒரு மரியாதை அளிக்கும் இராணுவ படைப்பிரிவுக்கு மேஜர் தினேஷ் நாங்கோம், கடற்படை படைக்கு லெப்டினன்ட் கமாண்டர் சச்சின் தன்கர் மற்றும் விமானப்படை படைப்பிரிவுக்கு ஸ்குவாட்ரன் லீடர் சி.எஸ்.ஷ்ரவன் தேவய்யா தலைமை தாங்குவார். தில்லி காவல் துறை படைக்குகாவல் துறை கூடுதல் துணை ஆணையர் அச்சின் கார்க் தலைமை தாங்குவார் .

கொடி ஏற்றப்பட்ட பிறகு, மூவர்ணக் கொடிக்கு ‘தேசிய வணக்கம்’ செலுத்தப்படும். ஒரு ஜே.சி.ஓ மற்றும் 25 பிற பிரிவுகளைக் கொண்ட பஞ்சாப் ரெஜிமென்ட் இராணுவ இசைக்குழு தேசிய கொடியை ஏற்றி ‘வணக்கம் செலுத்தும்’ வழங்கும் போது தேசிய கீதம் இசைக்கும். இந்த இசைக்குழுவை சுபேதார் மேஜர் ராஜிந்தர் சிங்  வழி நடத்துகிறார்.

பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப் படையின் இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் துருவ் மூல,  விழா நடைபெறும் இடத்தில் மலர் தூவப்படும். ஹெலிகாப்டர்களின் கேப்டன்களாக விங் கமாண்டர் அம்பர் அகர்வால் மற்றும் விங்  கமாண்டர் ராகுல் நைன்வால் இருப்பார்கள்.

மலர் தூவிய பின்னர், பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி) கேடட்கள் தேசிய கீதத்தை பாடுவார்கள்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,000 சிறுவர் மற்றும் சிறுமி கேடட்கள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இந்த கேடட்கள் கொத்தளத்திற்கு எதிரே உள்ள கியான்பாத்தில் அமர வைக்கப்படுவார்கள். அவர்கள் மூவர்ண உபகரணங்களுடன் ‘எனது இந்தியா’ சின்னத்தை உருவாக்குவார்கள். மொத்தம் 500 நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.

Tags: Prime Minister Narendra Modi will hoist the flag at the Red Fort tomorrow!
ShareTweetSendShare
Previous Post

அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

Next Post

யார் இந்த “சோரோஸ்”? : ராகுல் காந்தியின் ஏஜென்ட் என விமர்சிக்கும் பாஜக!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies