இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை ஒட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கட்டிடக்கலையை கருப்பொருளாக வைத்து இந்த டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டூடுலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரம், மதம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இதனை கார்ட்டூன் கலைஞர் விருந்தா ஜவேரி உருவாக்கியுள்ளார்.