ஜப்பானின் டோக்கியோ பகுதியில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆம்பில் என பெயர் சூட்டப்பட்டுள்ள புயல் மிக வலுவானது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 112 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.