உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய வீரர்கள் பலரை போர்க்கைதிகளாக உக்ரைன் சிறைப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களை ஒப்படைத்து ரஷ்யாவில் சிக்கியுள்ள உக்ரைனிய வீரர்களை மீட்பது குறித்தும், குர்ஸ்க் பகுதியில் ராணுவ அலுவலகம் அமைப்பது குறித்தும் அதிபர் Zelenskiy ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.