ரஷ்யாவின் பிரையன்ஸ்க், பெல்கோரோட் மற்றும் குர்ஸ்க் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குர்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் படைகள் முன்னேறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்படுபவர்களுக்காக பிரத்யேக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.