தங்கலான் திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம், திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்து தயாராகி உள்ளது.