வங்கதேசத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசினா, அமெரிக்காவின் சதியாலேயே தான் பதவியை இழந்ததாக தகவல் வெளியானது.
இதனை ஷேக் ஹசினாவின் மகன் மறுத்த நிலையில், அமெரிக்காவும் இதற்கு கண்டனம் தெரிவித்தது.
பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தாலும் இன்னும் அங்கு வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது