வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், முழுமையான தீர்ப்பு வெளியானதும் மேல்முறையீடு செய்யப்படுமென இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கனியா கூறியுள்ளார்.
ஒரு வரி தீர்ப்பு மட்டுமே தற்போது அளிக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான தீர்ப்பு கிடைக்க இன்னும் 15 நாள்கள் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முழுமையான தீர்ப்பு குறித்த தகவல் கிடைத்ததும் 30 நாட்களுக்குள் ஸ்விட்சர்லாந்தின் ஒன்றிணைந்த நடுவர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கனியா கூறியுள்ளார்.