சுதந்திர தினத்தை ஒட்டி, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 3 புதிய மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரோட்ஸ்டர் புரோ, ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் என இவற்றிற்கு பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த வாகனங்களை அறிமுகப்படுத்திய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால், இந்த வாகனங்களுக்கான முன்பதிவு இன்றிலிருந்து தொடங்குவதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் இவை டெலிவரி செய்யப்படும் என்றும் கூறினார்.