ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் பிரவதி பரிதா அறிவித்துள்ளார்.
கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரவதி பரிதா, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.