நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெண்களுக்கு எங்கும் எப்போதும் பாதுகாப்பு இல்லை என்றும், நிர்பயா சம்பவத்திற்கு பிறகு பெரிதாக எதுவும் மாறவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேபோல், நடிகைகள் கரீனா கபூர், ப்ரீத்தி ஜிந்தா, சாரா அலி கான், நடிகர் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர், படுகொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.