ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தமிழகம் – கர்நாடகா இடையே போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
செட்டிநொடி என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலை முழுவதும் கற்கள் குவிந்து கிடக்கிறது.
தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் செல்லம்பாளையம் சோதனைச் சாவடியிலும், அதேபோல், கர்நாடகத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் பர்கூர் சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.