மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் - தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 5, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 4, 2026, 08:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய நாட்டின் மிக நீண்ட காலப் பிரதமராக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆட்சி செய்து கொண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த திரு ஜவகர்லால் நேரு அவர்களின் நீண்டகால ஆட்சி சாதனையையும் அவர் முறியடித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நீண்ட கால ஆட்சிக்கு, அச்சாரமிட்டு, அடித்தளமாக இருந்தது அவரது அயராத உழைப்பிலும், சீரிய சிந்தனையிலும் உருவாக்கப்பட்ட, மக்கள் நலத் திட்டங்களே ஆகும். அவைகள் தான் இந்த வரலாற்றுச் சாதனைக்கு உறுதுணையாய் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த சாதனைக்குரிய, மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி, அபார வளர்ச்சியை கண்டுவருகின்றன என்றும் அவ்ர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மத்திய, மாநிலங்களின் கூட்டுறவு தான் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்ற பிரதமரின் கருத்தை வலுப்படுத்துவது போல, ஜோசப் விஜய்  தலைமையிலான த வெ க அரசு மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷின் 2.0 திட்டத்தை 2028 ஆம் ஆண்டு வரை நீடித்திருப்பது பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி ஆர் பாட்டில் மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்  முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது, ஒன்றுபட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு ஓர் உதாரணம் என தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 46.71 லட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்திட்டத்தின்படி மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 2,177.77 கோடி நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் வெப்பமயமாகுதல், காடுகளை அழித்தல், பருவநிலை மாற்றங்கள் ஆகியன பூமிபந்தை பாதிப்பதால் நீர்நிலைகளில் கடுமையான வறட்சி நிலை ஏற்படுகிறது. உலகளவில் இந்த பிரச்சனைகளை தீர்க்கவும், மக்களுக்கான சுற்று சூழலை பேணி பாதுகாக்கவும் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்ததுள்ளார்.

நமது கங்கைநதி உட்பட அனைத்து நதிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை பாதுகாக்கவும், கிராமங்கள் முன்னேற்றம் மற்றும் வேளாண் குடிகளின் நலங்களை பாதுகாக்கவும், பாரதிய ஜனதாவின் மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, மத்திய அரசின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களை, த வெ க அரசு முந்தைய திமுக அரசை போல் மொழி, இனம், அரசியல் ஆகிய சாயங்கள் பூசி, பிரிவினைவாதம் செய்யாமல் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென நயினார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Chief Minister VijayBJP State President Nainar Nagendran nainar nagendran on epsCentral Government's welfare schemesCentral Government welfare schemesJal Jeevan Mission 2.0'Narendra Modiprime ministerNainar Nagendran speechnainar nagendran statement
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

Next Post

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

Related News

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies