டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை போலீசார் அகற்றினர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த தற்காலிக கூடாரங்கள், மேடைகளை டெல்லி போலீசார் முழுமையாக அகற்றினர். இந்த நிலையில், தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
இளைஞர் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் நேரடியாக முன்வைக்க அனுமதித்து இந்த பிரச்சினைக்கு அரசு மற்றும் காவல்துறை தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















