சுதந்திர தின விழாவை ஒட்டி நெல்லையப்பர் கோயில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோயில் யானை காந்திமதி மரியாதை செலுத்தியது.
பக்தர்களின் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது அனைத்து தரப்பினரும் மரியாதை செலுத்தினர்.
அப்போது கோயில் யானை காந்திமதி தேசியக்கொடிக்கு துதிக்கையை உயர்த்தி வணக்கம் செலுத்தியது காண்போரை கவரும் விதமாக அமைந்தது.