ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக 3-வது முறையாக இந்திய அணி வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ரவி சாஸ்திரி, பந்து வீச்சாளர்களின் திறன் மற்றும் வலுவான பேட்டிங் வரிசை ஆகியவற்றால் இந்திய அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளார்.