சுதந்திர தினத்தை ஒட்டி, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் அரசியலைப்பில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரகம், இந்திய சுதந்திர தினம் குறித்த தங்களின் உற்சாகத்தை அதில் எந்த மொழியில் வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு இந்திய மொழிகளில் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, கொங்கணி, மராத்தி, குஜராத்தி என பவ்வேறு மொழிகளில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சுதந்திர தின வாழ்த்து கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.