SSLV D-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் EOS-08 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோன்நாத் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175 புள்ளி 5 கிலோ எடை கொண்ட அதிநவீன EOS-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் சிறிய ரக SSLV D-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. SSLV D-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் 175 புள்ளி 5 கிலோ எடைகொண்ட EOS-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியை கண்காணிக்கும் எனவும் பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதலுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் கூறினார்.