இஸ்லாமியர் வரவேற்கும் வக்ஃப் திருத்த மசோதா!
Sep 12, 2026, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர் வரவேற்கும் வக்ஃப் திருத்த மசோதா!

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முத்தலாக்கை தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு இஸ்லாமியர்களில் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்தங்கிய இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு சொத்தும் வக்ஃப் என்ற சொல் குறிக்கிறது. நாட்டில் ஒரு சொத்து வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டவுடன், அது அரசால் கூட திரும்பப் பெற முடியாததாகி விடுகிறது.

இந்தியாவில், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியமே உரிமையாக வைத்திருக்கிறது. இதனால் வக்ஃப் வாரியமே இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் ஆகும்.

நாடு முழுவதும் 1.2 லட்சம் கோடி மதிப்பிலான 9 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு உள்ளன. இவை 32 மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த வக்ஃப் வாரிய சொத்துக்கள் சுயமாக நியமிக்கப்பட்ட 200 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த சொத்துகள், சம்பந்தமாக சுமார் ​​40,000 வழக்குகள் வக்ஃப் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன. பிரத்தியேகமாக வக்ஃப் அதிகாரத்தில் உள்ள உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடிவதில்லை.

இதனால், அத்துமீறல்கள், முறைகேடுகள், உரிமை தகராறுகள் மற்றும் பதிவு மற்றும் கணக்கெடுப்பில் குளறுபடிகள் போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை தற்போதைய வக்ஃப் வாரிய அமைப்பில் உள்ள நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழலை எடுத்துக் காட்டுகிறது.

வக்பு சொத்துக்களை கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் 1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

எனினும், வக்பு வாரிய முறைகேடுகள் தொடர்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 123 வக்ஃப் சொத்துக்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃப் வாரியம், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஒரு முழு கிராமத்திற்கும் உரிமை கொண்டாடியது. மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் சன்னி வக்ஃப் வாரியமும் தாஜ்மஹாலுக்கு உரிமை கொண்டாடியது என வக்ஃப் வாரிய அத்துமீறல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.

வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 40, ஒரு சொத்து வக்ஃப் சொத்தாக கருதப்படுகிறதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களுக்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை வக்பு வாரிய உறுப்பினர்கள் நில அபகரிப்புக்கு தவறாக பயன்படுத்துவதாக பல புகார்கள் வந்துள்ளன.

இந்த மசோதாவில், வக்பு வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறது. மேலும், இஸ்லாம் மதம் சாராதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த புதிய மசோதாவில், மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியராக இல்லையென்றாலும், வக்பு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு தரப் பட்டிருக்கிறது.

மேலும் வக்ஃப் வாரியங்கள் எந்த நிலத்தையும் முறையான ஆவணங்கள் இல்லாமல் அபகரிப்பதைத் தடுக்கும் இந்த மசோதா, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடுவதற்கு வழிவகை செய்யும் இந்த மசோதா, ஒரு நிலத்தை வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்பந்தப்பட்டோருக்குத் தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு இஸ்லாம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம், முத்தலாக் நடைமுறையைத் தடை செய்தது. திருமணமான இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், ஒருதலைப்பட்சமான தலாக் அறிவிப்புகள் செய்வதையும் இந்த சட்டம் கட்டுப்படுத்தியது.

இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பை மேம்படுத்தும் முத்தலாக் சட்டம், ஆரம்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், பின்னர் இஸ்லாமிய சமூகத்தினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது போல், இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு இஸ்லாமியர்களின் பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags: Waqf amendment bill welcomed by Muslims!
Share
Tweet
SendShare
Previous Post

பாரதத்தின் வளர்ச்சி-ஓர் ஓப்பீடு!

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV D-3 ராக்கெட்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies