தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி கரையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு சிப்ஸ் தயாரிப்பு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தென்காசி தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.