கடலூரில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தைக் காண, அதே போல வேடமணிந்து சென்ற ரசிகருடன் பிறர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகியது.
கடலூர் அண்ணாபாலம் அருகே உள்ள ஒரு திரையரங்கில், ரசிகர் ஒருவர் தங்கலான் படத்தில் நடித்த விக்ரமின் கதாபாத்திரத்தை போன்றே வேடமணிந்து சென்றார். இதைக் கண்ட சக ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.