பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்துக்கு 74 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக்கூடாது என தேசிய மருத்துவ கமிஷன் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பயிற்சி மருத்துவர்களின் பனிச்சூழல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்த தேசிய மருத்துவ கமிஷன் பனிக்குழு பரிந்துரையை சமர்பித்துள்ளது.அதில், பயிற்சி மருத்துவ மாணவர்களின் பனிச்சுமையை குறைக்க கூடுதலாக மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை மருத்துவ மாணவர்களின் உடல் மற்றும் மன நலனுக்காக நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்துக்கு 74 மணி நேரம் மட்டுமே பணி ஒதுக்க வேண்டும் என்றும், வார விடுமுறை கட்டாயம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.