ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷேச தினங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் . இந்நிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து நாளை காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு உஷ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே சபரிமலை கோயிலின் புதிய தந்திரியாக, கண்டரரு ராஜீவரரு இன்று பொறுப்பேற்கிறார்.