கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வது தொடர்பாக புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பூங்கொடி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மாவட்டத்தில் கருக்கலைப்பு மற்றும் சிசுவின் பாலினம் கண்டறிவது அதிகமாக நிகழ்ந்து வருவதாகவும், சிசுவின் பாலினம் மற்றும் கருக்கலைப்பு போன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே அன்மையில் கருகலைப்பின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.