ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரயில்வே பணியில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாரீஸில் நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினர். இந்நிலையில் வடக்கு ரயில்வே தலமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஷெராவத்துக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.