ஸ்பெயின் கால்பந்து வீரரின் தந்தை மீது மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் வீரர் லமைன் யமல் தனது குடும்பத்துடன் மடாரோவில் வசித்து வருகிறார். அவரின் தந்தை மவுனிர் நஸ்ரவ்ஹி தனது செல்லப்பிராணியை அழைத்துக்கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.