திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் லாரி மீது கார் மோதி விபத்தில் பெண் உயிரிழந்தார்.
பணக்குடியை சேர்ந்த ராஜன் – விஜயராணி தம்பதி காரில் சென்றுகொண்டிருந்தனர். வள்ளியூர் ஏர்வாடி பாலம் அருகே சென்றபோது பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.
இதில் சம்பவ இடத்தில் விஜயராணி உயிரிழந்த நிலையில் காயங்களுடன் ராஜன் உயிர்தப்பினார்.